» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை
புதன் 20, மே 2026 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் திருநங்கை ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பெரியசாமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் மதுரா என்ற முனீஸ்வரன் (19). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருநங்கையாக மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெரியசாமிநகரில் உள்ள ஒரு வீட்டில் திருநங்கைகளின் தலைவியான சானியா மற்றும் ரக்ஷிதா, எஸ்தர், ஸ்ரேயா ஆகிய சக திருநங்கைகளுடன் இணைந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
திருநங்கை மதுராவும், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வீட்டில் மதுரா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவர் காதலர் சந்தோஷ் உடன் செல்போனில் பேசும் போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வருத்தத்திற்கு ஆளான மதுரா, தான் தங்கியிருந்த வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய மதுராவை மீட்டு அவசரச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த தலைமை மருத்துவர், மதுரா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துத் திருநங்கைகளின் தலைவி சானியா (39) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி மற்றும் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்குக் காரணமான காதல் தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் விஷம் குடித்த வாலிபர் பலி!
புதன் 20, மே 2026 12:15:03 PM (IST)

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது டிஎஸ்பியிடம் புகார்!
புதன் 20, மே 2026 12:05:31 PM (IST)

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி விபத்து - மூதாட்டி உயிரிழப்பு!
புதன் 20, மே 2026 11:52:01 AM (IST)

தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் - மாவட்டத்தில் 450 மருந்தகங்கள் மூடல்!
புதன் 20, மே 2026 11:36:50 AM (IST)

வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலி - தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 20, மே 2026 11:16:29 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.136.35 கோடி அதிநவீன உயர் சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம்: ஸ்ரீநாத் எம்.எல்.ஏ ஆய்வு!
புதன் 20, மே 2026 10:56:12 AM (IST)










