» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)
தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறியதால், அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ஸ்ரீநாத், திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் உட்பட மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை: தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி மையத்தில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை வகித்து வந்தார்.
தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 62,805 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் தவெக வேட்பாளர் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி, பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். ஆனால், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் 26,213 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் அவரோடு சேர்த்து மொத்தம் 13 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)

கோவில்பட்டி தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி : சரிந்தது அதிமுக கோட்டை!
செவ்வாய் 5, மே 2026 8:17:31 AM (IST)









