» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்காளம், அஸ்ஸாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பாரதிய ஜனதா விளாத்திகுளம் வடக்கு மண்டல் சார்பாக மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையிலும், ஒன்றிய தலைவர் ஆர்.காட்டு ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம்; மே 6, 13ல் மதுரைக்குச் செல்லாது!
செவ்வாய் 5, மே 2026 3:55:57 PM (IST)

வெற்றி - தோல்வியை சமமாகக் கருதி லட்சியப் பயணத்தை தொடருவோம்: கீதாஜீவன் அறிக்கை!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









