» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் அபார வெற்றி: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

திங்கள் 4, மே 2026 7:58:00 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீநாத் அமோக வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த அவர், இறுதியாகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார்.

தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் வாக்குகள் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரை அனைத்துச் சுற்றுகளிலும் ஸ்ரீநாத் முன்னிலை பெற்று வந்த நிலையில், இன்று மாலை அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

ஸ்ரீநாத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திரண்டிருந்த தவெக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 

ஸ்ரீநாத் தமிழக (வெற்றிக் கழகம்) - 1,00,536 வெற்றி

பி. கீதா ஜீவன் (திராவிட முன்னேற்றக் கழகம்) - 62,805

செல்லப்பாண்டியன் (அஇஅதிமுக) - 26,213

ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாம் தமிழர் கட்சி) - 11,752


மக்கள் கருத்து

Unmaiமே 5, 2026 - 10:22:03 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில், சட்டம், ஒழுங்கை காக்க தவறிய, (கஞ்சா விற்பனை, அதிகப்படியான கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிக வழிப்பறி,ரவுடிசம்) இதனால் தோல்வி அடைந்தார். ( இப்படிக்கு,திமுக வை நம்பி கடந்த தேர்தலில், திமுக விற்கு வாக்களித்தவன்)

வாக்காளர்மே 4, 2026 - 09:23:25 PM | Posted IP 104.2*****

நல்லப்படியாக ஆட்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory