» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் மூழ்கி அரசு ஐடிஐ மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்!
ஞாயிறு 3, மே 2026 9:26:34 AM (IST)
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 19 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள வரதராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவரது மகன் மாரிச்செல்வம் (19), தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தைக்கு உதவியாக மாரிச்செல்வம் ஆடு மேய்க்கச் செல்வது வழக்கம்.
நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், மாரிச்செல்வம் ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்ட முயன்றபோது, ஆடுகள் அனைத்தும் மொத்தமாக ஆழமான பகுதியை நோக்கிச் சென்றுள்ளன. அவற்றைப் பிடிக்கச் சென்ற மாரிச்செல்வத்திற்கு நீச்சல் தெரியாததால், எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கினார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தட்டப்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடி மாரிச்செல்வத்தை மீட்டனர். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரிச்செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் தந்தைக்கு உதவியாகச் சென்ற மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









