» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடி மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:20:24 PM (IST)

நாலுமாவடியில் உள்ள புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கிக் கௌரவித்தார்.
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் தொடங்கப்பட்ட புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை, கடந்த 2022 ஜூலை 7 முதல் பொதுமக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுவதால் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திசையன்விளை, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு மகப்பேறு சிகிச்சைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - ரம்யா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இது இந்த மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தை என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மோகன் சி லாசரஸ், குழந்தைக்குத் தங்க மோதிரம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். முன்னதாக புதுவாழ்வு சங்க அறங்காவலரும், பன்னோக்கு மிஷன் மருத்துவமனை இயக்குனருமான அன்புராஜன் வரவேற்றார். மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்வில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறந்த பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 29, ஏப்ரல் 2026 3:41:29 PM (IST)

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தல் : செல்போன் டவரில் ஏறி ஆதரவாளர் போராட்டம்!
புதன் 29, ஏப்ரல் 2026 3:31:24 PM (IST)

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி - போலீசார் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 3:25:22 PM (IST)

பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சி.எஸ். நரேந்திரன் காலமானார்
புதன் 29, ஏப்ரல் 2026 3:11:53 PM (IST)

மே 4ல் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
புதன் 29, ஏப்ரல் 2026 12:32:03 PM (IST)

ரசாயன மாம்பழங்கள் விற்பனை: தமிழகம் முழுவதும் தீவிர சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவு!
புதன் 29, ஏப்ரல் 2026 12:20:26 PM (IST)








