» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி - போலீசார் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 3:25:22 PM (IST)
விளாத்திகுளம் அருகே மதுபோதையில் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அயன் பொம்மையாபுரம், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (38), கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தனது வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடி மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:20:24 PM (IST)

சிறந்த பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 29, ஏப்ரல் 2026 3:41:29 PM (IST)

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தல் : செல்போன் டவரில் ஏறி ஆதரவாளர் போராட்டம்!
புதன் 29, ஏப்ரல் 2026 3:31:24 PM (IST)

பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சி.எஸ். நரேந்திரன் காலமானார்
புதன் 29, ஏப்ரல் 2026 3:11:53 PM (IST)

மே 4ல் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
புதன் 29, ஏப்ரல் 2026 12:32:03 PM (IST)

ரசாயன மாம்பழங்கள் விற்பனை: தமிழகம் முழுவதும் தீவிர சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவு!
புதன் 29, ஏப்ரல் 2026 12:20:26 PM (IST)








