» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறந்த பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா!

புதன் 29, ஏப்ரல் 2026 3:41:29 PM (IST)



கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சௌபாக்கியா மஹாலில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்க மாவட்ட ஆளுநர் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் சங்க செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து காவல்துறை, அரசுப் போக்குவரத்து கழகம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களைப் பாராட்டி தினேஷ் பாபு விருதுகளை வழங்கினார்.

ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், பாபு, முத்துச்செல்வன், ஆசியா பார்ம்ஸ் பாபு, நாராயணசாமி உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory