» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் வங்கி மேலாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

புதன் 29, ஏப்ரல் 2026 8:13:53 AM (IST)

கயத்தாறில் பெண் வங்கி கிளை மேலாளரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராமசரஸ்வதி நகரைச் சேர்ந்த லட்சுமி பிரபா என்பவர், கயத்தாறில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த திங்கள்கிழமை அன்று, நாகலாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் (37) என்பவர் வங்கிக்கு வந்துள்ளார். தான் அடகு வைத்த நகையைத் திருப்பிய பிறகு, அதற்கான வட்டி விவரங்கள் குறித்து மேலாளர் லட்சுமி பிரபாவிடம் கேட்டுள்ளார்.

மேலாளர் லட்சுமி பிரபா, அந்த விவரங்களை உதவி மேலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், "வட்டி குறித்து நீங்கள்தான் சொல்ல வேண்டும்" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, மேலாளரை அவதூறாகப் பேசிய நாகராஜன், அங்கிருந்த நாற்காலியை எடுத்து மேலாளரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நாகராஜனைத் தடுக்க முயன்றபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த லட்சுமி பிரபா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். வங்கி மேலாளர் தாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory