» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

தூத்துக்குடியில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் அமைப்பின் சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப்பணி நிகழ்வில், அந்த வழியாகச் சென்ற 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் குளிர்ந்த நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் செயலாளர் அலன், தீபக், வீர கண்ணன் மற்றும் ஹாட்லி ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
இதில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றினர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஜேசிஐ அமைப்பின் இந்த மனிதாபிமான முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)





