» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது

வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)



விளாத்திகுளம் அருகே சட்டவிரோத விற்பனைக்காக 105 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருசம்பட்டி பகுதியில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உதவி ஆய்வாளர் நாராயணன் தலைமையிலான போலீசார் இன்று (17.04.2026) அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (38), ராஜ் (28) மற்றும் குளத்துரைச்  சேர்ந்த சுரேந்திரன் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 

உடனடியாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 105 கிலோ 650 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory