» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீணாக்காமல் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தேவையான குடிநீர், வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் படுகையிலிருந்து கொண்டு வரப்பட்டு, மாநகராட்சி மூலம் அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாகக் கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.பொதுமக்கள் குடிநீரை வீணாக்குவதைத் தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி ஆணையர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்:
குடிநீர் விநியோகத்தின் போது தங்களது தேவைக்குத் தண்ணீரைப் பிடித்தவுடன், உடனடியாகக் குடிநீர் குழாய்களை முறையாக மூடி வைக்க வேண்டும். குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவுவது, வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டுவது மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீணாக்காமல் ஒத்துழைக்க வேண்டும். கோடை காலத்தில் மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப் பொதுமக்கள் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
தெருவாசிApr 12, 2026 - 07:30:02 AM | Posted IP 172.7*****
அது எவன் கேக்க போறான், நிறைய பேர் வீட்டில கார் இருக்கும்போது அதை தினமும் கழுவுறாங்க
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)











MAKKALApr 13, 2026 - 01:06:27 PM | Posted IP 104.2*****