» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர் வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரது மகன் கணேஷ் முருகன் (25). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பிட்டராக  வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற கணேஷ் முருகன், பணி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரது தாயார் உத்தண்டக்கனி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கணேஷ் முருகன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

முதற்கட்ட விசாரணையில், கணேஷ் முருகன் பணி முடிந்த பிறகு தனது ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எந்தத் திசையில் சென்றார் என்பதைத் கண்டறிய, அனல் மின் நிலைய நுழைவு வாயில் மற்றும் அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory