» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)
ஆழ்வார்திருநகரி அருகே கார் - பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குருகாட்டூர் மேலத் தெருவைச் சேர்ந்த கேந்திரன் மகன் சுனில் தர்ஷன் (29). இவர் ஆத்தூர் அருகே புன்னக்காயலில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மாதத்தில் குழந்தை உள்ளது. குழந்தையுடன் மனைவி நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று இரவில் சுனில் தர்ஷன் மனைவியை பார்ப்பதற்காக கல்லிடைக்குறிச்சிக்கு காரில் புறப்பட்டு சென்றார். முத்துகிருஷ்ணாபுரம் அருகே அவர் காரைத் திருப்ப முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து தென்திருப்பேரை நோக்கி வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுனில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த தென்திருப்பேரை புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் (52) என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 13, மே 2026 8:25:31 AM (IST)










