» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST)
தூத்துக்குடியில், சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 45 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் இன்று சிதம்பரநகர் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.
சோதனையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வன்னியராஜன் (52) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வன்னியராஜனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் டியூஜே புகார்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:10:53 PM (IST)

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)







