» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 77 லட்சம் ரொக்கம் மற்றும் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ரூ. 5,05,477 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இன்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் 77,01,696 ரூபாய் ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 5,05,477 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு மொத்தம் 72,18,146 ரூபாய் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும், முறையற்ற பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் டியூஜே புகார்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:10:53 PM (IST)

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)







