» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் கீதா ஜீவன் : தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:58:38 AM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன், நேற்று மாலை தனது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குட்பட்ட பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவர் காலனி, விவேகானந்தர் காலனி, கோமதிபாய் காலனி மற்றும் ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இந்தப் பிரச்சார நிகழ்வின் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் தனலட்சுமி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர்கள் தெய்வேந்திரன், சந்தன மாரிமுத்து, சுரேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று வாக்குச் சேகரித்தனர். செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் கீதா ஜீவனுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் டியூஜே புகார்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:10:53 PM (IST)

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)







