» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனிதா ராதாகிருஷ்ணன் வாகனத்தை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி: பிரசாரத்தில் பரபரப்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 7:58:02 AM (IST)

திருச்செந்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தைப் பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று கோட்டூர் பகுதியில் பிரசாரம் செய்யச் சென்றபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சரின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு, தொகுதிப் பிரச்சினைகள் குறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஏற்க மறுத்த மக்கள், அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதால் அங்குப் பதற்றம் நிலவியது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, திட்டமிட்டபடி அந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய முடியாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கள்விளை கிராமத்தில் அமைச்சரின் வாகனத்தை மக்கள் திருப்பி அனுப்பிய நிலையில், தற்போது கோட்டூர் பகுதியிலும் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரம் செல்லும் இடங்களில் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், திருச்செந்தூர் தொகுதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் டியூஜே புகார்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:10:53 PM (IST)

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)







