» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய உழைப்பேன்: வேட்பாளர் சத்யா தீவிரப் பிரச்சாரம்

புதன் 8, ஏப்ரல் 2026 8:21:51 PM (IST)



விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்யா, தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மணியக்காரன்பட்டி, கம்பத்துப்பட்டி, முத்துச்சாமிபுரம், வடக்கு முத்தையாபுரம், சிவலார்பட்டி, சுப்புலாபுரம், நடுக்காட்டூர், முத்துப்பட்டி, சப்பனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சத்யா நேற்று வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தங்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் வேட்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த வேட்பாளர் சத்யா பேசுகையில்: "மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் தகுதியுள்ள நபர்களுக்குச் சரியாகச் சென்றடைய வேண்டும். அதற்குத் திறமையான மற்றும் சரியான சட்டமன்ற உறுப்பினர் இருப்பது அவசியம். என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால், உங்களுக்கான திட்டங்களை முழுமையாகப் பெற்றுத் தருவதில் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருப்பேன். உங்களுக்காக எப்போதும் உழைப்பேன்," என்று வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் தனவதி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் மோகன், சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சரவணன் கிருஷ்ணன், நிர்வாகிகள் கந்தசாமி, பழனிமுருகன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory