» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)



2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பி. கீதா ஜீவனுக்கு, சமத்துவ மக்கள் கழகத்தினர் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கழகத்திற்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாததால், அக்கட்சி முதலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருந்தது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குச் சமத்துவ மக்கள் கழகம் தனது ஆதரவை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து, சமத்துவ மக்கள் கழகத் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி பி.எம். அற்புதராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அமைச்சர் பி. கீதா ஜீவனை நேரில் சந்தித்தனர். அவருக்குச் சால்வை அணிவித்து, வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறத் தீவிரமாகப் பணியாற்றுவோம் என ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர் டேனியல் ராஜ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory