» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி: 246 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 244 நுண் பார்வையாளர்கள் நியமனம்!

செவ்வாய் 31, மார்ச் 2026 4:32:12 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தற்செயல் முறையில் தேர்வு செய்யும் (Randomization) முதற்கட்டப் பணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  க.இளம்பகவத், இ.ஆ.ப.  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்  எலுச்சூரி ரத்னாகர ராவ், சோடிங்புயீ,  அரவிந்த் குமார் வெர்மா, காவல் பார்வையாளர்  ஹியர்மத் சுதிர் கல்யா மற்றும் செலவினப் பார்வையாளர்  நகுல் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள், கவனிக்கத்தக்க (Vulnerable) வாக்குச்சாவடிகள்  243, கூர்நோக்கக் கூடிய (Critical) வாக்குச்சாவடிகள் 3 என  கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் மொத்தம் 203 அமைவிடங்களில் அமைந்துள்ளன. 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மத்திய அரசுப் பணியாளர் நுண் பார்வையாளராக நியமிக்கப்படுவார். மேலும், இணையவழி நேரடி ஒளிபரப்பு (Webcasting) மற்றும் மத்தியப் படைப் பாதுகாப்பு ஆகியவையும் அங்கு உறுதி செய்யப்படும். இன்றைய முதற்கட்டத் தேர்வின் மூலம் மொத்தம் 244 நுண் பார்வையாளர்கள் (காப்புப் பணியாளர்களையும் சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory