» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!

செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

உடன்குடி பஜார் சாலையில் வாய் தகராறில், ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாத்தர்கோன் விளையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரப்பட்டணம் காவல் நிலையப் போலீசார், வேல்முருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாவட்டக் காவல் மதன் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சாத்தர்கோன் விளை சிவன் மகன் கோவிந்தன் (22) மற்றும் 2 சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் சாலையில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory