» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா!

செவ்வாய் 31, மார்ச் 2026 4:18:58 PM (IST)



100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் குஜராத் மற்றும் பந்தல்குடியில் திறக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலம் ஆனந்த் நகரிலும், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியிலும் புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய கிளைகள் குஜராத் ஆனந்த் பகுதியில் தீயணைப்பு நிலையம் எதிரில், மற்றும் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகச் செயல்படத் தொடங்கியுள்ளன. 

புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சலீ எஸ் நாயர் கூறுகையில்: "வலுவான விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மற்றும் வணிகச் சூழல் கொண்ட பகுதிகளில் எங்களது வங்கிச் சேவையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளின் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி தீர்வுகளைத் துரிதமாக வழங்க முடியும் என்று தெரிவித்தார்.



தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 621 கிளைகளுடன் தனது சேவையைத் தொடர்கிறது. 12 மண்டல அலுவலகங்களைக் கொண்டுள்ள இவ்வங்கி, தற்போது 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmb.in (அல்லது www.tmb.net.in) என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory