» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)
சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடாமல், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கூட்டணி கட்சியான அதிமுக கேட்டுக் கொண்டதாலேயே, நெல்லைத் தொகுதிக்குப் பதிலாகச் சாத்தூர் தொகுதியில் போட்டியிடச் சம்மதித்தேன். வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டவுடன் சாத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வேன். எந்தத் தொகுதியில் நின்றாலும் தமிழகம் முழுவதும் எனது மக்கள் பணி தொடரும். நெல்லைக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளை தான்.திமுக அரசுக்கு எதிராக இன்று மாலை 'குற்றப்பத்திரிகை' தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த முறை 'ஹீரோ'வாக இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை 'ஜீரோ'வாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கே திமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் சூழல் நிலவுகிறது.
மதச்சார்பின்மை என்று பேசும் திமுகதான் மதம் சார்ந்து இயங்குகிறது. முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார், ஆனால் மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் சமமாக வாழ்த்து தெரிவித்து வருகிறது.
பாஜக தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தேசத்திற்காகவும், கொள்கைக்காகவும் உழைக்கக்கூடியவர்கள். தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, மக்களின் எண்ணமே முக்கியம். வரும் ஏப்ரல் 4-ம் தேதி பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)

ஏப்ரல் 1: உலக முட்டாள்கள்? அறிவாளர்கள் தினம் வரலாறு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:51 PM (IST)

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கொடை விழா: அதிமுக வேட்பாளர் சாமி தரிசனம்
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:55 PM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு
செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST)







