» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 31, மார்ச் 2026 11:21:18 AM (IST)

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "பங்குனி உத்திரத் திருவிழா அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.

வேலை மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்களும் இத்திருநாளில் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்து வழிபாட்டில் கலந்துகொள்வார்கள். இந்த விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதியை உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்திலும் பொதுமக்கள் தடையின்றி வழிபாடு செய்ய ஏதுவாக, ஏப்ரல் 1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு ஈடாக, ஏப்ரல் 11, 2026 (இரண்டாம் சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும் அந்த மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory