» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீ சாரதா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா

திங்கள் 30, மார்ச் 2026 8:40:26 PM (IST)



ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சுபத்ரா வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும், முதல்வர் ஷர்மிளா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தம் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டு, அவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


மக்கள் கருத்து

என்ன இதுMar 30, 2026 - 09:26:30 PM | Posted IP 104.2*****

பட்டமளிப்பு விழா? அந்த பட்டத்தை வைத்து வேலை கிடைக்குமா? அது எல்லாம் வெளிநாட்டு பட்டம் என்ற பந்தா கலாச்சாரம் இப்போதய எல்லா பள்ளிகளில் நடக்கிறது, ஆனால் அரசுப்பள்ளியில் மட்டும் நடக்கவில்லையே, இது பெற்றோர்களை பெருமைப்படுத்த பந்தா காட்ட மட்டுமே.. ஹி ஹி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory