» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் வழங்காவிட்டால் தனித்துப் போட்டியிடப்போவதாக சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டப் பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், நாடார் பேரவை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் ஒரு நல்ல நண்பனாகத் தொடர்ந்து வரும் சமத்துவ மக்கள் கழகத்திற்கு, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான நாடார் சமுதாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 40 ஆண்டுகாலப் பொதுவாழ்வு அனுபவம் கொண்ட சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் அவர்களுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளித்து, நாடார் சமுதாயத்தை அங்கீகரிக்க வேண்டும்.
கட்சித் தலைவர் ஆணையிட்டால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழக வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளனர். கட்சியின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் அடையாளம் காட்டும் வேட்பாளர்களின் வெற்றிக்கு மட்டுமே தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் காமராசு நாடார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)

ஏப்ரல் 1: உலக முட்டாள்கள்? அறிவாளர்கள் தினம் வரலாறு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:51 PM (IST)

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கொடை விழா: அதிமுக வேட்பாளர் சாமி தரிசனம்
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:55 PM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு
செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST)








கோமாளிMar 30, 2026 - 05:53:15 PM | Posted IP 104.2*****