» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:12:22 AM (IST)

தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதன் பகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் ஞாயிறு முதல் அந்த வாரம் முழுவதும் பரிசுத்த நாட்களாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக எருசலேம் நகருக்குள் வெற்றி வீரராக நுழைந்ததை நினைவு கூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள் நடைபெற்றன. லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவக் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை செல்வன் பர்னாந்து தலைமையில், அருட்தந்தை அமலன் தமியான் முன்னிலையில் பவனி தொடங்கியது.
பின்னர், இறைமக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி 'ஓசன்னா' பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தூத்துக்குடியின் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயம்,திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் முக்கிய வாரமான இந்தப் புனித வாரத்தில், வரும் ஏப்ரல் 03-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 'புனித வெள்ளி'யும், ஏப்ரல் 05-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான 'ஈஸ்டர்' பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)







