» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன், தொகுதியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டித் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான இவர், இன்று விருசம்பட்டி, வேடபட்டி, மாமு நைனாபுரம், நெடுங்குளம், துவரந்தை, ஈ.வேலாயுதபுரம் மற்றும் பல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் அவருக்குக் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்லாகுளம் கிராம மக்களிடையே பேசிய மார்க்கண்டேயன் கூறியதாவது: "கொல்லன் பட்டறையில் குண்டூசியைத் தேட வேண்டிய அவசியமில்லை என்பது போல, உங்களிடம் நான் புதிதாக வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பல்லாகுளம் கிராம மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை நான் ஏற்கெனவே கொண்டு வந்துள்ளேன். இந்த நான்கு ஆண்டுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், உங்களில் ஒருவனாகவும் எப்போதும் உடனிருந்து பணியாற்றி வருகிறேன்.
நான் செய்த மக்கள் பணிகளை அங்கீகரித்து, மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அக்கிராமங்களுக்குச் செய்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைக் குறிப்பிட்டு, மக்களிடம் அவர் ஆதரவு கோரினார்.
இந்த பிரச்சாரப் பயணத்தில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பு ராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சடையாண்டி, ஒன்றியச் செயலாளர் சபாபதி, திமுக நிர்வாகி பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







