» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)
மணப்பாடு கடற்கரை பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் நேற்று மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களான சின்னதுரை (27), அபிஷேக் (20), திசையன்விளை பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (24) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)

வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST)







