» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கொலை மிரட்டல் - ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 29, மார்ச் 2026 9:05:12 AM (IST)
தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கிளை மேலாளரை மிரட்டியதாக தற்காலிக ஓட்டுநர் மீது வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஹரிராம் (31). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் தினமும் தேவைக்கேற்ப வெவ்வேறு வழித்தடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தனக்குத் தொடர்ந்து ஒரே வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கிளை மேலாளர் முருகேசனை (52) ஹரிராம் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிராம், கிளை மேலாளர் முருகேசனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கிளை மேலாளர் முருகேசன் இது குறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஓட்டுநர் ஹரிராம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)







