» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசில்' சின்னம் பொறித்த 4,000 எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல் - த.வெ.க. நிர்வாகிக்கு வலைவீச்சு!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:49:37 AM (IST)

ஆறுமுகநேரியில் வாக்காளர்களுக்கு வழங்கப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4,000 எவர்சில்வர் தட்டுகள் மற்றும் குக்கர்களைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி திசைகாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவிலான பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் திருச்செந்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் வைரவேல் அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, அந்த வீட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் 'விசில்' சின்னம் பொறிக்கப்பட்ட 3,926 எவர்சில்வர் தட்டுகள் மற்றும் 16 குக்கர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையிட வந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் குக்கர்களை அதிகாரிகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பொன் இசக்கியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னம் பொறித்த பொருட்கள் இவ்வளவு பெரிய அளவில் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)







