» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு : பிரசாரத்தைத் தொடங்கினர்!

ஞாயிறு 29, மார்ச் 2026 8:31:38 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த தொகுதிகளுக்கு வருகை தந்த அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவில்பட்டி: "தி.மு.க. எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது" - கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் சத்யா ஆகியோர் நேற்று சென்னைலிருந்து கோவில்பட்டி வந்தடைந்தனர். இனாம் மணியாச்சி சந்திப்பில் அவர்களுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. மின் கட்டணம் மற்றும் வரிகள் உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். "இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும், தி.மு.க. எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது." எனத் தெரிவித்தார்.

சி.த.செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளரும், மாநகரச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். 3-வது மைல் பகுதியில் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், காமராஜர், வ.உ.சி., எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். "தூத்துக்குடி தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என உறுதிபடத் தெரிவித்தார்.

எஸ்.பி.சண்முகநாதன்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று தொகுதிக்கு வருகை தந்து, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory