» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 9:58:00 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியனுக்கு இன்று காலை தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், முத்துராமலிங்க தேவா் அம்பேத்காா், பொியாா், குரூஸ்பா்னாந்து, காமராஜா், வஉசி, அண்ணா, எம்.ஜி.ஆா் உள்ளிட்ட பல தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்துகிறார். இதில், அதிமுக பாஜக உள்பட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)







