» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்: திருச்செந்தூர் அருகே பரபரப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 7:56:44 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத 4.40 லட்சம் ரூபாய் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சொகுசு வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

ஒரு வாகனத்தில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வீரராஜகுமார் என்பவரது மனைவி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி இருந்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ராணி என்பதும், திருச்செந்தூர் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்ததும் தெரியவந்தது. அவருடன் மற்றொரு வாகனத்தில் ராணியின் பாதுகாவலர்களும் வந்திருந்தனர்.

வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 4.40 லட்சம் ரொக்கப் பணம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதமிடம் முறைப்படி ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory