» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகம் வளர்ச்சி பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கிறது : அமைச்சர் பெ. கீதாஜீவன் பேச்சு!
வெள்ளி 27, மார்ச் 2026 7:53:17 AM (IST)
மத்திய பாஜக அரசின் பாராமுகம் மற்றும் அதிமுகவின் இரட்டை வேடத்தை முறியடிக்க, தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எனச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பர நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் தலைமை வகிக்க, மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.பி.சி.பி. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பெ. கீதாஜீவன் பேசியதாவது: கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யாமல் பாஜக அரசு வஞ்சித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மதக் கலவரங்களோ, ஜாதிச் சண்டைகளோ இல்லாத அமைதியான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் இன்று வளர்ச்சி பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கிறது. தூத்துக்குடியின் அடிப்படை வசதிகள் மேலும் மேம்படவும், மதவாத சக்திகளுக்குப் பாடம் கற்பிக்கவும் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், காங்கிரஸ் முரளிதரன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து, இ.கம்யூனிஸ்ட் மாடசாமி, தேமுதிக தயாலிங்கம், மதிமுக முருகபூபதி, விசிக விமல் வங்காளியர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, ச.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)







