» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில், தனியார் நிதி நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பூபால் ராயபுரம், 6-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தன சுடலைமணி (22). இவர் தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள தனியார் கோல்டு ஃபைனான்ஸ்' நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இன்று பணி நிமித்தமாகத் தனது ஹோண்டா யூனிகார்ன் இருசக்கர வாகனத்தில் குளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.
தருவைகுளம் பால்நாடார் ஹோட்டல் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தன சுடலைமணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முனியசாமி (25) என்பவரைப் போலீசார் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் வயதிலேயே வங்கி அதிகாரியாகப் பணியாற்றி வந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், பூபல் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)








தூத்துக்குடி. கெ. ரதன் 20 வது வார்டு தலைவர் காங்கிரஸ்Mar 26, 2026 - 10:38:34 PM | Posted IP 104.2*****