» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!

செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)



தூத்துக்குடியில் மதுபோதையில் அஜாக்கிரதையாக லாரி ஓட்டி வந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் ரூ. 10,000 அபராதம் விதித்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின்படி, நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மதுபோதையில் இருந்தது கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் கோவிந்தனுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை  நிரந்தரமாக ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.     மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனத் தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 28, 2026 - 08:02:53 AM | Posted IP 172.7*****

போங்கடா டாஸ்மாக் ல சாராயம் எல்லாம் அரசியல்வாதிகள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து வருகிறதே அதை தடை செய்யமாட்டார்கள்.

MullaimathiMar 24, 2026 - 02:09:05 PM | Posted IP 104.2*****

இதை மிக மிக வேர்க்கிறோம் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனம் இயக்கும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் மற்றும் 100 லத்தி அடியும் கொடுக்க வேண்டும் ஐயா நான் ஏன் ஒழுக்கமாக வண்டி ஓட்டும் ஓட்டுநர்களின் வேண்டுகோள் மிக்க நன்றி ஐயா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory