» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காரில் கொண்டு வந்த ரூ.13.30 லட்சம் பறிமுதல்: : தேர்தல் பறக்கும் படை அதிரடி!
வெள்ளி 20, மார்ச் 2026 7:59:00 PM (IST)

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஓட்டப்பிடாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி தலைமையிலான பறக்கும் படையினர், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சுசி பெட்ரோல் நிலையம் அருகே நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.13,30,000 ரொக்கப் பணம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தூத்துக்குடி தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். இந்தச் சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர் லதா மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி, பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், விசாரணைக்குப் பின் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 8:20:18 PM (IST)

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!
வெள்ளி 20, மார்ச் 2026 4:38:35 PM (IST)

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 12:23:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)








