» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் மார்ச் 21ம் தேதி ரமலான் பண்டிகை : அரசு காஜி கூட்டமைப்பு அறிவிப்பு
ராதாகிருஷ்ணன் | வியாழன் 19, மார்ச் 2026 8:25:15 PM (IST)
தமிழகத்தில் இன்று ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆகப் பூர்த்தி செய்யப்பட்டு, வரும் சனிக்கிழமை (மார்ச் 21) ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு காஜி கூட்டமைப்பு பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் இன்று (19-03-2026, வியாழக்கிழமை) ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்திற்கான பிறை எங்கும் தென்படவில்லை. எனவே, ரமலான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து, வரும் 21-03-2026 சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை (ஈகைத் திருநாள்) கொண்டாடப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு வழங்கப்பட வேண்டிய ஸதகத்துல் ஃபித்ரு அளவு குறித்துப் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: ஹனஃபி முறை 1 கிலோ 633 கிராம் கோதுமை அல்லது அதன் கிரயமான (மதிப்பு) ரூபாய் 90/- வழங்கப்பட வேண்டும். ஷாஃபிஈ முறை - 2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசியைப் பொருளாக மட்டுமே வழங்க வேண்டும் (பணமாகக் கொடுக்கக் கூடாது). தர்மங்கள் தழைத்தோங்கவும், சகோதரத்துவம் பெருகவும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
ராதாகிருஷ்ணன் | செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









