» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சனி 14, மார்ச் 2026 4:32:37 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் நா. பெலிக்ஸ் விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீ.ஆ. சண்முகம் வரவேற்றார். சிங்கப்பூர் யுனைடெட் ரிசர்ச் நிறுவன மேலாண் இயக்குநர் ஏ.வி. சுரேஷ் தலைமையில், சர்வதேச வேலைவாய்ப்புகள் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

வேளாண் வணிகப் பிரிவு மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் மாணவர்களின் 'டால்பின்' மற்றும் 'ஷார்க்' அணிகளுக்கு இடையே வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் எஸ். ஆதித்தன் தலைமையிலான 'டால்பின்' அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்நிகழ்வில் மீன்வளத்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் பா. ஐசக் ஜெயக்குமார் உள்ளிட்டப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory