» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சனி 14, மார்ச் 2026 4:10:03 PM (IST)



வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த புதன்கிழமை வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, மாநில செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்டு ராஜா, சுயம்பு, சரவணன் சிவபெருமாள் பாஜக நிர்வாகிகள் கந்தசாமி, பெஞ்சமின் பாண்டியன்,லீலாவதி, புகழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory