» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் கொத்தனார் மரணம்: ரூ.27 லட்சம் நஷ்டஈடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு!

சனி 14, மார்ச் 2026 3:35:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 27 லட்சம் நஷ்டஈடு வழங்க திருநெல்வேலி மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி, தேவசகாய நாடார் காலனியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரது மகன் அந்தோணி அருளானந்தம் (35). சென்டரிங் மற்றும் கட்டிட கொத்தனார் வேலை செய்து வந்த இவர், கடந்த 29.8.2025 அன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொடுங்கனி விலக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து உயிரிழந்த அந்தோணி அருளானந்தத்தின் மனைவி ஜெனிட்டா, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வழக்கறிஞர் வீ. ரவீந்திரன் மூலமாக திருநெல்வேலி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ. 50 லட்சம் நஷ்டஈடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு தாக்கல் செய்யப்பட்ட 4 மாத காலத்திற்குள், 14.3.2026 அன்று திருநெல்வேலி மாவட்ட நீதிபதி ஜாய் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் வீ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory