» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐசிசிடியூ) சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
தமிழக அரசின் அரசாணை படி 2017 முதல் நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தொழிற்சங்கத் தலைவர் பொன்ராஜ் மீதான பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும். 2026-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தி, PF மற்றும் ESI திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏஐசிசிடியூ தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மதுரை பைபாஸ் ரோடு எப்.சி.ஐ ரவுண்டானா அருகில் சங்க அலுவலகத்தில் வைத்து மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது. இதில் நிர்வாகிகள் மின்னல் அம்ஜத், சிவராமன், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் பலர் கலந்துகொண்டனர். அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

பேனர்கள், பணப் பரிமாற்றம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் விளக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 10:55:59 AM (IST)

மிளகாய் பறிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு : வெயில் கொடுமையால் சோகம்!!
சனி 11, ஏப்ரல் 2026 10:42:08 AM (IST)

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்
சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)

அதிகாரியின் அவதூறு பேச்சு: சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 10:25:05 AM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: சங்கரப்பேரி விலக்கில் பிரமாண்டக் கூட்டம்.
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)







