» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மிளகாய் பறிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு : வெயில் கொடுமையால் சோகம்!!
சனி 11, ஏப்ரல் 2026 10:42:08 AM (IST)
குளத்தூர் அருகே வெயில் தாக்கத்தின் காரணமாக நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகள் வள்ளியம்மாள் (70). திருமணமாகாத இவர், குளத்தூர் - வேடநத்தம் சாலையில் தமக்குச் சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மிளகாய் பறிப்பதற்காகத் தனது நிலத்திற்குச் சென்றுள்ளார்.
மாலை நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது அக்கா மகன் காமராஜிற்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் நிலத்திற்குச் சென்று தேடியபோது, வள்ளியம்மாள் நிலத்தில் குப்புற விழுந்த நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்தூர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் போலீசார், வள்ளியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வள்ளியம்மாள் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தபோது, நிலவிய கடும் வெயில் மற்றும் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

பேனர்கள், பணப் பரிமாற்றம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் விளக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 10:55:59 AM (IST)

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்
சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)

அதிகாரியின் அவதூறு பேச்சு: சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 10:25:05 AM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: சங்கரப்பேரி விலக்கில் பிரமாண்டக் கூட்டம்.
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)







