» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை தீ விபத்து: உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் நிவாரண நிதி வழங்கல்
புதன் 11, மார்ச் 2026 8:18:58 AM (IST)
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலை கிடங்கில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி கோவில்பட்டி விஜயாபுரி கீழத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் (27), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் (47) மற்றும் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சுடலைமுத்து (42) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த தமிழக முதல்வர், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ஹீமான்சு மங்கள் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களிடம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.
கார்த்திக்கின் தந்தை சமுத்திரம், சுடலைமுத்துவின் மனைவி விஜயலட்சுமி, கணேசனின் மனைவி ஷீலா ஆகியோர் இந்த நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

பேனர்கள், பணப் பரிமாற்றம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் விளக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 10:55:59 AM (IST)

மிளகாய் பறிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு : வெயில் கொடுமையால் சோகம்!!
சனி 11, ஏப்ரல் 2026 10:42:08 AM (IST)

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்
சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)

அதிகாரியின் அவதூறு பேச்சு: சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 10:25:05 AM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: சங்கரப்பேரி விலக்கில் பிரமாண்டக் கூட்டம்.
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)







