» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
புதன் 11, மார்ச் 2026 8:14:36 AM (IST)
ஆறுமுகனேரி அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில், சிறுவர்களைக் குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மணிகண்டனைச் சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அடைக்கப் பயன்படும் 10 'ஜிப் லாக்' கவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, மணிகண்டனை சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

பேனர்கள், பணப் பரிமாற்றம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் விளக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 10:55:59 AM (IST)

மிளகாய் பறிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு : வெயில் கொடுமையால் சோகம்!!
சனி 11, ஏப்ரல் 2026 10:42:08 AM (IST)

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்
சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)

அதிகாரியின் அவதூறு பேச்சு: சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 10:25:05 AM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: சங்கரப்பேரி விலக்கில் பிரமாண்டக் கூட்டம்.
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)







