» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் விருதுகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் தாய்மை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் பி. ராஜம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எம்.எஸ். ரூபா வரவேற்புரையாற்றினார். பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நிகழ்வில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினார். மருத்துவம், கல்வி, கலை மற்றும் சமூக சேவைத் துறைகளில் சிறந்து விளங்கிய முனைவர் எம்.எஸ். ரூபா, பல் மருத்துவர் ஐஸ்வர்யா, டாக்டர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் விஜயலட்சுமி, தொழிலதிபர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பாடகி விஸ்வரூபினி மற்றும் பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் நலிவடைந்தோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், முனைவர் சகா.மா. சங்கர் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)







