» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்

திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)



எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நிலவும் சகோதரத்துவத்தையும் மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. 

"எல்லோருக்கும் எல்லாம்" என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். மக்களின் உணவு மற்றும் உடை சுதந்திரத்தில் தலையிடும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். வரும் தேர்தலில் முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கை விடக் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து மதத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory