» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மாடசாமி (45). கட்டடத் தொழிலாளியான இவர், அதே பகுதியில் 1-ஆவது தெருவில் மாரிமுத்து என்பவர் புதிதாகக் கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து மாடசாமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மாடசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory